பாதிக்கப்பட்ட சொத்துக்கள் விவகாரத்தைத் தீர்ப்பதற்காக 6 உறுப்பினர்கள் குழு
October 27 , 2018 2389 days 817 0
பாதிக்கப்பட்ட சொத்துக்கள் (Stressed Assests) தீர்விற்காக கடனளிப்போர்களுக்கிடையேயான ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு 6 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.
மேற்பார்வைக் குழுவானது இந்திய வங்கிகள் சங்க நிர்வாகத்தின் (Indian Banks’ Association) கீழ் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.
மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு
ஜானகி பல்லாப் (முன்னாள் தலைவர், பாரத ஸ்டேட் வங்கி)
MBN ராவ் (கனரா வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்)
M தாமோதரன் (செபியின் முன்னாள் தலைவர்)
HR கான் (ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர்)
இந்த மேற்பார்வைக் குழுவானது டாடா குழுமத்தின் ஆற்றல் பிரிவிலிருந்து மூத்த நிர்வாகி ஒருவரையும், பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரையும் கொண்டிருக்கும்.