TNPSC Thervupettagam

பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்குப் புகலிடம்

August 31 , 2026 13 days 71 0
  • கௌரவக் கொலைகள் அல்லது சாதிப் படுகொலைகள் மற்றும் அது தொடர்பான வன்முறைகளால் பாதிக்கப்படக்கூடிய மற்றும் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ‘பாதுகாப்பான இல்லத்தை’ அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • 2018 சக்தி வாஹினி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்தும், கௌரவக் கொலைகளில் இருந்து தப்பியவர்கள் மற்றும் ஆர்வலர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கூறினார்.
  • பெண்களின் பார்வையில், இந்தப் புகலிடம் முழுமையான உயிர்நாடியாக உள்ளது.
  • சாதி கலப்புத் திருமணங்களில் ஈடுபடும் தம்பதிகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல்கள் குறித்த புகார்களைப் பெறுவதற்காக, தமிழகம் 2018-ஆம் ஆண்டிலேயே 24 மணி நேர உதவி எண்ணுடன் கூடிய சிறப்புப் பிரிவுகளை நிறுவி ருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்