பாதுகாக்கப்பட்ட இனங்களின் பட்டியலில் நீலக்குறிஞ்சி
January 17 , 2023 941 days 454 0
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகமானது (MoEF) நீலக் குறிஞ்சியினை (ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா) பாதுகாக்கப்பட்ட தாவரங்களின் பட்டியலில் சேர்த்து, 1972 ஆம் ஆண்டு வன உயிரினங்கள் (பாதுகாப்பு) சட்டத்தின் IIIவது அட்டவணையின் கீழ் பட்டியலிட்டுள்ளது.
இதன் படி இந்தச் செடியைப் பிடுங்குபவர் அல்லது இதனை அழிப்பவர்களுக்கு ரூ. 25,000 அபராதம் மற்றும் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இந்த ஆணைப் படி, நீலக்குறிஞ்சியினைப் பயிரிடுவதற்கும் அல்லது அதனை வைத்து இருப்பதற்கும் அனுமதியில்லை.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், கிட்டத்தட்ட 70 வகையான நீலக்குறிஞ்சி செடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா எனப்படும் நீலக் குறிஞ்சி மிகவும் பிரபலமானதாகும்.
இருப்பினும், நீலக் குறிஞ்சியின் வேறு சில அரிய வகைகளும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படுகின்றன.