TNPSC Thervupettagam

பாதுகாக்கப்பட்ட பட்டியலிலிருந்து 18 நினைவுச் சின்னங்கள் நீக்கம்

August 17 , 2026 2 days 127 0
  • 1958 ஆம் ஆண்டின் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்விடங்கள் மற்றும் எஞ்சியவைகள் (AMASR) சட்டத்தின் கீழ், 18 நினைவுச் சின்னங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதனை நிறுத்தியதை டுத்து, 2021 ஆம் ஆண்டு முதல் மத்தியப் பாதுகாக்கப்பட்ட பட்டியலிலிருந்து அந்த 18 நினைவுச் சின்னங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது.
  • நிக்கல்சன் சிலை மற்றும் மேடை, பரா கம்பா கல்லறை, இன்ச்லா வாலி கும்டி (தில்லி); கோஸ் மினார் எண் 13, கோஸ் மினார் (அரியானா); பச்சௌன் கோட்டையில் உள்ள கல்வெட்டு (மத்தியப் பிரதேசம்); 12-ம் நூற்றாண்டு கோயில், கோட்டையில் உள்ள கல்வெட்டு (ராஜஸ்தான்); குடும்பரி பகுதி (உத்தரகாண்ட்) ஆகியவை அந்த 18 இடங்களில் அடங்கும்.
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள பழமையான ஆலமரம், மூடப்பட்ட கல்லறை, கன்னர் பர்கில்ஸ் கல்லறை, கௌகாட்டில் உள்ள கல்லறை, ஜஹ்ரைலா சாலையில் உள்ள கல்லறைகள், லக்னோ-பைசாபாத் சாலையில் உள்ள கல்லறைகள், அஹுகியில் உள்ள மூன்று சிறிய லிங்கக் கோயில்கள், தெலியா நாலா பௌத்த இடிபாடுகள் மற்றும் கருவூலக் கட்டிடத்தில் உள்ள பலகை ஆகியவை அந்த இடங்களில் அடங்கும்.
  • இந்தியத் தொல்லியல் துறை (ASI) இப்போது 3,688 மத்தியப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களைப் பராமரிக்கிறது; AMASR சட்டத்தின் 35-வது பிரிவு, தேசிய முக்கியத்துவத்தை இழக்கும் நினைவுச் சின்னங்களைப் பட்டியலிலிருந்து நீக்க வழி வகை செய்கிறது.
  • அமெரிக்காவிலிருந்து 589, ஆஸ்திரேலியாவிலிருந்து 51, இங்கிலாந்திலிருந்து 21 மற்றும் நெதர்லாந்திலிருந்து 1 உட்பட, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வெளிநாடுகளிலிருந்து 662 வரலாற்றுத் தொல்பொருட்களை இந்தியா மீட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்