பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் முறையான இடப்பெயர்விற்கான உலக உடன்படிக்கை
July 21 , 2018 2591 days 786 0
சர்வதேச இடப்பெயர்வினை சிறப்பாக நிர்வகிப்பதற்கான பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் முறையான இடப்பெயர்விற்கான உலக உடன்படிக்கையினை ஐக்கிய நாடுகள் முதன் முதலாக இறுதிபடுத்தியுள்ளது.
சர்வதேச இடப்பெயர்வு, இடப்பெயர்விற்கான உரிமையை வலுப்படுத்துதல், நிலையான மேம்பாட்டிற்கான பங்களிப்பு ஆகியவற்றில் உள்ள சவால்களை குறிப்பிட்டுக் காட்டுவதே இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.
முழுமையான மற்றும் விரிவான முறையிலான சர்வதேச இடப்பெயர்வின் பரந்த அளவிலான பரிமாணங்களை ஒன்று சேர்ப்பதற்கான அரசுகளுக்கு இடையேயான முதல் ஒப்பந்தம் இதுவாகும்.
அமெரிக்காவைத் தவிர ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்பினர்களும் இந்த உடன்படிக்கையினை ஒப்புக்கொண்டுள்ளனர். இது சட்டப்பூர்வமாக யாரையும் கட்டுப்படுத்தாத ஒன்றாகும்.