இந்திய அரசானது பாதுகாப்பான தளவாட ஆவணப் பரிமாற்றத்தினைத் தொடங்கி உள்ளது.
தளவாட செலவினங்களைக் குறைப்பதற்கும், தளவாடங்களின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் பன்முகத் தன்மையைப் பெருமளவில் ஊக்குவிப்பதற்கும் வேண்டி இந்த முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பசுமை இல்ல வாயு உமிழ்வினை அளவிடும் ஒரு கணிப்பானும் (கால்குலேட்டர்) இதில் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் முன்முயற்சிகளானது அரசினாலும் எந்தவொரு தனியார் நிறுவனங்களினாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத சில பகுதிகளிலுள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக வேண்டி தொடங்கப்பட்டுள்ளன.