பாதுகாப்பு சபையின் 1325 தீர்மானத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு
October 19 , 2025 12 days 51 0
2025 ஆம் ஆண்டானது 2000 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் 1325 தீர்மானத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இது பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) செயல்பாட்டு நிரலை நிறுவியது.
தீர்மானம் 1325 ஆனது, உலகளவில் அமைதியைக் கட்டமைத்தல், மோதல் தடுப்பு மற்றும் மோதலுக்குப் பிந்தைய மீட்பு ஆகியவற்றில் பெண்கள் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
2000 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் சபையின் உறுப்பினராக இருந்த நமீபியா, இந்தத் தீர்மானத்தினை ஏற்பதில் முக்கியப் பங்கு வகித்தது.