பாதுகாப்புக் கூட்டாண்மை - இந்தியா மற்றும் அமெரிக்கா
November 5 , 2025 16 hrs 0 min 35 0
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பாதுகாப்புத் துறையில் உத்தி சார் ஒத்துழைப்பு மற்றும் கூட் டுறவினை வழிநடத்த 10 ஆண்டு காலக் கட்டமைப்பில் கையெழுத்திட்டுள்ளன.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 12வது ASEAN/ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு-பிளஸ் (ADMM-பிளஸ்) நிகழ்வின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருதரப்பு பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின மற்றும் மேற்கொள்ளப் பட்டு வரும் பாதுகாப்புத் துறை சார் ஈடுபாடுகளை மதிப்பாய்வு செய்தன.
அடுத்தப் பத்தாண்டுகளில் பாதுகாப்புத் துறையின் கூட்டாண்மையை பரிமாற்றுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இந்தக் கட்டமைப்பு ஓர் ஒருங்கிணைந்த கொள்கை வழிகாட்டலை வழங்குகிறது.
இராணுவப் பயிற்சிகள், உளவுத்துறை பகிர்வு, பாதுகாப்புத் தொழில்துறை மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைகள் மற்றும் உத்தி சார் ஒருங்கிணைப்புக்கான கூட்டு வழிமுறைகள் ஆகியவை ஒத்துழைப்பு மேற்கொள்ள உள்ள துறைகளில் அடங்கும்.