“பானிபட் செயல்பாட்டு அலகு” என்ற புதிய இராணுவப் பிரிவினைஉருவாக்குவது பற்றி தாலிபன் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய பிரிவானது பாகிஸ்தானுடன் எல்லையிலுள்ள ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் நிலைநிறுத்தப்படும்.
ஹரியானாவிலுள்ள பானிபட் என்ற இடம் அந்நியப் படையெடுப்பாளர்களுக்கும் இந்திய அரசர்களுக்கும் இடையே 3 போர்கள் நடைபெற்ற ஒரு இடமாகும்.
ஆப்கானிஸ்தானில் இந்த 3 போர்களும் குறிப்பாக, 1761 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று அகமது சா அப்தலிக்கும் மராத்தியர்களுக்கும் இடையில் நடைபெற்ற 3வது போரானது அவ்வப்போது விவாதத்திற்கு வரும் ஒரு போராகும்.
அப்தலி, இன்றைய ஆப்கானிஸ்தானை நிறுவியவராகக் கருதப்படுகிறார்.
மராத்தியர்களுக்கு எதிரான போரில் இவர் பெற்ற ஒரு வெற்றியை ஆப்கானியர்கள் போற்றுகின்றனர்.