பான்னி புல்வெளிகளில் மேய்ப்பர்களுக்கான உரிமைக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆதரவு
May 27 , 2021 1542 days 716 0
சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பான்னி புல்வெளிகளில் 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பிற்கு எதிராக மல்தாரி சமூகத்தினர் வழக்குத் தொடுத்தனர்.
6 மாதத்திற்குள் குஜராத்தின் பான்னி புல்வெளிகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.
மேலும் ஒரு மாதத்திற்குள் இதற்கான செயல்திட்டத்தைத் தயார் செய்யுமாறும் இணைக் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின் பிரிவு 3 என்ற பிரிவின் படி பான்னி புல்வெளிப் பகுதிகளில் சமூகக் காடுகளைப் பாதுகாப்பதற்காக மல்தாரி சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையானது தொடர்ந்து செல்லுபடியாகும் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
மல்தாரி சமூகத்தினர் இந்தியாவின் குஜராத் பகுதியில் வாழும் பழங்குடியின கால்நடை வளர்ப்புச் சமூகத்தினர் ஆவர்.
மல்தாரி சமூகத்தினர் பான்னி வகை எருமைகளை வளர்க்கின்றனர்.
பான்னி எருமைகள் இந்தப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு உள்ளூர் இனம் ஆகும் (endemic).