பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் சங்கங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இந்த அமைப்பானது பயங்கரவாதக் குழுக்களுடனான தொடர்பு மற்றும் நாசத்தினை விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் சட்டவிரோத நடவடிக்கை (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் மாநில அரசுகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, PFI அமைப்பானது LeT, JeM, al Qaida, SIMI மற்றும் பிற தீவிரவாதக் குழுக்கள் இடம் பெற்றுள்ள "தடை செய்யப்பட்ட அமைப்புகளின்" பட்டியலில் இணைந்துள்ளது.
PFI அமைப்புடன் இணைந்து செயல்படும் 8 அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூன்று முஸ்லீம் அமைப்புகளின் இணைப்பின் விளைவாக 2007 ஆம் ஆண்டில் PFI நிறுவப்பட்டது.