1992 ஆம் ஆண்டு டிசம்பர் 06 அன்று நிகழ்ந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் (32 நபர்களும்) விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.
சிபிஐ நீதிபதியான சுரேந்திர குமார் யாதவ் இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.
இந்த 2000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பானது லக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் 28 ஆண்டு காலப் பழமையான பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.
இந்த விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்ட 17 நபர்கள் காலமாகினர்.
குற்றம் சுமத்தப் பட்டவர்கள் 153 ஏ (பல்வேறு குழுவினரிடையே பகைமையை வளர்த்தல்), 153 பி மற்றும் 505 (தவறான செய்திகளைப் பரப்புதல்) & பிரிவு 147 (கலவரத்தில் ஈடுபடுதல்) உள்ளிட்ட ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டிருந்தனர்.