- இது சமீபத்தில் காணொலி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டது.
- இது புதுடெல்லியிலுள்ள ஒருங்கிணைந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
- ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 17 அன்று அனுசரிக்கப்படும் பாம்புக்கடி பற்றிய விழிப்புணர்விற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு இந்த மாநாடானது நடத்தப் பட்டது.
இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்பட்ட பாதிப்புகள்
- 2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான 20 ஆண்டு காலத்தில், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 58,000 உயிரிழப்புகளுடன் நாட்டில் 1.2 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
- இதில் 97% உயிரிழப்புகள் கிராமங்களிலும், பாதியளவிற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் தங்களது செயல்படும் உற்பத்தித் திறன் காலங்களில் உயிரை இழக்கும் ஆண்களாகவும் உள்ளனர்.