பாயல் ஜாங்கிட் - கோல்கீப்பர்ஸ் குளோபல் கோல்ஸ் விருதுகள் 2019
September 26 , 2019 2157 days 775 0
நியூயார்க்கில் நடைபெற்ற 2019 ஆண்டின் கோல்கீப்பர்ஸ் குளோபல் கோல்ஸ் விருதுகள் வழங்கும் விழாவில் ‘மாற்றத்தை ஏற்படுத்துபவருக்கான விருதைப்’ பெற்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையை ராஜஸ்தானின் ஆல்வாரைச் சேர்ந்த 17 வயதான பாயல் ஜாங்கிட் பெற்றார்.
தனது சொந்த ஹின்ஸ்லா கிராமம் மற்றும் பிற அண்டை கிராமங்களில் குழந்தைத் திருமண நடைமுறையை ஒழிப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இவர் ஹின்ஸ்லாவில் உள்ள பாலர் பஞ்சாயத்தின் (குழந்தைகளின் பாராளுமன்றம்) சார்பாஞ்சாகப் (தலைவர்) பணியாற்றுகின்றார். இது பால் மித்ரா கிராமம் (குழந்தைகளுக்கு உகந்த கிராமம்) ஆகும்.
இந்தப் பரிசு வழங்கும் கருத்தானது நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி என்பவரால் நிறுவப்பட்டது ஆகும்.