பாரதிய பாஷா உத்சவம் 2025 ஆனது மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளில் புது டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Many Languages, One Emotion" என்பதாகும்.
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் பழங்குடி மொழிகளின் மொழி பெயர்ப்பு அமைப்பானது ஆதி வாணி, சந்தாலி, குய், பிலி, முண்டாரி, கோண்டி மற்றும் காரோ ஆகிய மொழிகளிலும் செயல்படுவதாகச் செயல்விளக்கம் அளிக்கப் பட்டது.
அழிந்து வரும் மொழிகளின் மொழியியல் சேர்க்கை, ஆவணப்படுத்தல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்தப் பாதுகாப்பை இந்த விழா ஊக்குவித்தது.