இந்திய ரிசர்வ் வங்கியானது நுகர்வோருக்குச் சாதகமான ஒரு முன்னெடுப்பாக, பாரத் கட்டணம் செலுத்தும் முறையின் (Bharat Bill Payment System – BBPS) நோக்கம் மற்றும் அதன் வரம்பெல்லையை விரிவுபடுத்தியுள்ளது.
தன்னார்வ அடிப்படையில், தகுதியுள்ள பங்கேற்பாளர்களாக தொடர்ச்சியான கட்டணங்கள் மற்றும் பண வழங்கீடுகளைத் (முன்பணம் செலுத்துதல் தவிர) திரட்டும் அனைத்து வகைக் கட்டணதாரர்களும் இதில் அடங்குவர்.
பள்ளிக் கட்டணம், காப்பீட்டுத் தொகை, மாதாந்திர தவணைத் தொகைகள் மற்றும் நகராட்சி வரி ஆகியவை BBPS மூலமாக செலுத்தலாம்.
இதுபற்றி
BBPS என்பது ஒரு ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறையாகும். இது ஆன்லைன் (நிகழ்நேரம்) மற்றும் பணியில் உள்ள முகவர்களின் அமைப்பு வழியாக செயல்படக் கூடிய கட்டணச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.
இது இந்திய தேசியப் பணவழங்கீட்டுக் கழகத்தின் (National Payments Corporation of India) கீழ் செயல்படுகின்றது.