ஆவின் - தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (TNCMPFL) நிறுவனத்துடன் இணைந்து பாரத் சஞ்சீவனி என்ற கைபேசிச் செயலியானது வெளியிடப் பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்துடன் தொடர்புடைய கால்நடை உரிமையாளர்களுக்கு மிகவும் சில அத்தியாவசிய கால்நடைப் பராமரிப்பு சேவைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த தகவல்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாநிலத்தில் உள்ள பால் பண்ணை விவசாயிகளுக்காக 1800-425-2577 எனப்படும் கட்டணமில்லா உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆவின் நிறுவனமானது, 3.8 லட்சம் விவசாயிகளிடமிருந்து ஒரு நாளைக்கு 36.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 30.02 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது.