TNPSC Thervupettagam

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்திற்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதி

November 5 , 2021 1388 days 473 0
  • பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்தினை 18 வயதினருக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்துவதற்காக வேண்டி அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • கோவாக்சின் என்பது முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  ஒரு தடுப்பு மருந்து ஆகும்.
  • இது ஹைதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினால் தயாரிக்கப்பட்டது.
  • உலக சுகாதார அமைப்பானது இதுவரையில் பைசர் - பயான்டெக், ஆஸ்ட்ராசெனிகா – Sk பயோ/இந்திய சீரம் நிறுவனம், ஜான்சன் & ஜான்சன், மாடெர்னா மற்றும் சைனோஃபார்ம் ஆகியவற்றின் தடுப்பு மருந்திற்கான அவசரகாலப்  பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்