எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (TERI) ஆனது, 2026 ஆம் ஆண்டு பாரத் பருவநிலை மன்றத்தில் "India’s PV Manufacturing & Its Strategic Inflection Points" என்ற அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கை பாலிசிலிக்கான் முதல் வேஃபர்கள், கலன்கள் மற்றும் தொகுதிகள் வரை இந்தியாவின் சூரிய ஒளிமின்னழுத்த (PV) உற்பத்தி சங்கிலியை ஆய்வு செய்கிறது.
சீனா 98% வேஃபர்கள், 92% பாலிசிலிக்கான், 91.8% கலன்கள் மற்றும் 84.6% தொகுதிகளுடன் ஒரு பெரிய உலகளாவியப் பங்கைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டிற்கு சுமார் 120 GW தொகுதி உற்பத்தி திறன் உள்ளது ஆனால் மிகக் குறைந்த மேம்பாட்டுத் திறன் உள்ளது.
இந்தியாவின் சூரிய தொகுதி உற்பத்தித் திறன் 2030 ஆம் ஆண்டளவில் ஆண்டிற்கு 280 GW அளவைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் கலன் உற்பத்தித் திறன் ஆண்டிற்கு சுமார் 171 GW ஆக உயரக்கூடும்.
வலுவான உள்நாட்டுச் சூரிய மின்சக்தித் துறையை உருவாக்குவதற்கான தேசிய தூய எரிசக்தி உற்பத்தி அமலாக்கத் திட்டத்தை இந்த அறிக்கை ஆதரிக்கிறது.