February 11 , 2024
459 days
389
- இந்தியாவின் முதன்மையான நாடகத் திருவிழாவான 25வது பாரத் ரங் மஹோத்சவமானது நாடு முழுவதும் 13 நகரங்களில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
- 21 நாட்கள் அளவிலான கலாச்சார நிகழ்வான இதில் 150க்கும் மேற்பட்ட நாடகங்கள், பயிலரங்கங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- இந்த ஆண்டு, ‘ரங்தூத்’ என்று அழைக்கப்படும் இந்த விழாவின் விளம்பரத் தூதர்கள், நடிகர் பங்கஜ் திரிபாதி மற்றும் நடிகர் பரேஷ் ராவல் ஆகியோர் ஆவர்.
- இதில் நாட்டுப்புற நாடகங்கள், தெரு நாடகங்கள், நவீன நாடகங்கள், வங்காளதேசம், நேபாளம், ரஷ்யா, இத்தாலி ஆகிய நாடுகளின் நாடகங்கள் இடம் பெற உள்ளன.

Post Views:
389