TNPSC Thervupettagam

பாரத் ஸ்டேஜ் VII விதிமுறைகள்

October 17 , 2026 8 days 133 0
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் பயணிகள் கார்களுக்கான BS-VII உமிழ்வுத் தரநிலைகளை அறிமுகப் படுத்த முன்மொழிந்துள்ளது.
  • இந்தத் தரநிலைகள் கடுமையான வெளியேற்ற-உமிழ்வு வரம்புகள், நிஜ உலக ஓட்டுநர் சோதனைகள் மற்றும் உள்-உமிழ்வுக் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் வாகன மாசுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இதன் செயலாக்கமானது வெளியேற்ற உமிழ்வுகள், பிரேக் துகள்கள், டயர் தேய்மானம் மற்றும் மின்கல நீடித்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கி ஏப்ரல் 2029, ஏப்ரல் 2031 மற்றும் ஏப்ரல் 2035 என மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த விதிகளானது பெட்ரோல், டீசல், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG), எத்தனால் கலந்த எரிபொருள்கள், ஹைட்ரஜன், கலப்பின மற்றும் மின்சார வாகனங்களை உள்ளடக்கியது; மின்சார வாகன மின்கலங்கள் 5 ஆண்டுகளுக்கு அல்லது 100,000 கி.மீ வரை குறைந்தபட்சம் 75% செயல்திறனைத் தக்கவைக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழல் வாகன பாஸ்போர்ட்/சீட்டு வாகன உமிழ்வு, எரிபொருள் நுகர்வு மற்றும் மின்கலன் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை வழங்கும்; இந்தியா தற்போது BS-VI தர நிலைகளைப் பின்பற்றுகிறது, இது நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்