TNPSC Thervupettagam
August 12 , 2025 10 days 84 0
  • பாரத்ஜென் செயற்கை நுண்ணறிவு ஆனது புது டெல்லியில் நடைபெற்ற பாரத்ஜென் உச்சி மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்திய மொழிகளுக்கான பல்நோக்குப் பெரிய மொழி மாதிரியாகும்.
  • தற்போது, இந்த மாதிரிகள் இந்தி, மராத்தி, தமிழ், மலையாளம், வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஒன்பது மொழிகளில் செயல்படுகின்றன.
  • இது 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திட்டமிடப்பட்ட 22 இந்திய மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.
  • பாரத்ஜென் மாதிரியானது, பல்துறை இணையவெளி அமைப்புகள் குறித்த தேசிய திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • இது இந்திய விழுமியங்களில் வேரூன்றிய நெறிமுறை, உள்ளடக்கிய மற்றும் பன்மொழி செயற்கை நுண்ணறிவை ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது சுகாதாரம், கல்வி, வேளாண்மை மற்றும் நிர்வாகத்திற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்