உலக சுகாதார அமைப்பு (WHO) "பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வரைபடமாக்குதல்" (Mapping the Application of Artificial Intelligence in Traditional Medicine) என்ற தலைப்பில் ஒரு தொழில்நுட்ப சுருக்கத்தை வெளியிட்டுள்ளது.
பாரம்பரிய அறிவு சார் எண்ணிம நூலகத்தினை (TKDL) அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா என்று இந்த ஆவணம் அங்கீகரித்துள்ளது.
பாரம்பரிய மருத்துவ அமைப்புகளுடன், மிக குறிப்பாக ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) அமைச்சகத்துடன் செயற்கை நுண்ணறிவினை (AI) மிகவும் நன்கு ஒருங்கிணைப்பதில் இந்தியா முன்னிலை வகிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.