TNPSC Thervupettagam

பாரம்பரிய ஆணையம் உருவாக்கம்

October 12 , 2025 26 days 92 0
  • நான்கு வாரங்களுக்குள் தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தினை (TNHC) நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
  • 12 ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியன்று TNHC சட்டம் அமலுக்கு வந்த போதிலும், அந்த ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
  • தேசிய அல்லது மாநிலத் தொல்பொருள் சட்டங்களின் கீழ் வராத பாரம்பரியக் கட்டிடங்களைப் பாதுகாப்பதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட உள்ளது.
  • இந்து சமய மற்றும் அறநிலைய (HR&CE) துறை மேற்கொள்ளும் கோயில் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்