TNPSC Thervupettagam

பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளுக்கான பள்ளி

December 1 , 2025 4 days 76 0
  • மதுரையின் திருப்பரங்குன்றம் தாலுக்காவில் உள்ள வளையங்குளம் கிராமத்தில் கிராமியக் கலை வடிவங்களுக்கான பயிற்சிப் பள்ளியைத் தொடங்க தமிழக அரசு நிலம் வழங்க உள்ளது.
  • பள்ளியை அமைப்பதற்காக, பறையிசைக் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான R. வேல்முருகனின் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
  • 2026–27 ஆம் ஆண்டில் புதிய முதுகலைப் படிப்பு தொடங்கும் என்ற நிலையில் மேலும் பல்கலைக் கழகத்திற்கான நிதி உதவி 3 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.
  • இசை மற்றும் நுண்கலை/கவின்கலை மாணவர்களுக்காக ‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  • நடிகர் சிவகுமார் மற்றும் கலைஞர் சந்துரு ஆகியோருக்கு முதலமைச்சர் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.
  • சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்திற்கான மூன்றாவது பட்டமளிப்பு விழாவின் போது இது வழங்கப் பட்டது.
  • முதல்வர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்