TNPSC Thervupettagam

பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவியப் பரவல்

September 29 , 2025 3 days 22 0
  • பாரம்பரிய மருத்துவ முறையானது, பில்லியன் கணக்கானவர்களுக்கு முதன்மை சுகாதாரப் பராமரிப்பாகச் செயல்படுவதுடன் உலக சுகாதார அமைப்பின் (WHO) 194 உறுப்பினர் நாடுகளுள் 170 நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
  • 10% முதல் 20% வரையிலான வருடாந்திர வளர்ச்சியுடன் உலகளாவியப் பாரம்பரிய மருத்துவச் சந்தையானது, 2025 ஆம் ஆண்டிற்குள் 583 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆயுர்வேதமானது பல நாடுகளில் ஒரு மருத்துவ முறையாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளதுடன், இந்தியா 1.54 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்களை 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
  • தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு (2022–23) ஆனது 95% கிராமப்புற மற்றும் 96% நகர்ப்புற மக்கள் AYUSH பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுள்ளதாக கூறியது என்ற நிலையில், அதற்கு முந்தைய ஆண்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அந்த மருத்துவத்தினைப் பயன்படுத்தினர்.
  • இந்தியா 25 இருதரப்பு AYUSH ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது மற்றும் 39 நாடுகளில் 43 AYUSH தகவல் மையங்களையும், வெளிநாடுகளில் 15 கல்வி சார் இருக்கைகளையும் அமைத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்