பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் உலக மையம்
March 12 , 2022 1160 days 466 0
குஜராத்தின் ஜாம் நகரில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் ஒரு உலக மையத்தினை நிறுவுவதற்கு வேண்டி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மையமானது ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், சோவா-ரிக்பா மற்றும் ஹோமியோபதி) அமைச்சகத்தின் கீழ் நிறுவப் படுகிறது.
பாரம்பரிய மருத்துவத்திற்கான முதல் மற்றும் ஒரே உலகப் புற மையம் (அலுவலகம்) இதுவாகும்.