பாரம்பரிய மருத்துவத்துடன், குறிப்பாக ஆயுஷ் மருத்துவ முறைகளுடன் செயற்கை நுண்ணறிவினை ஒருங்கிணைப்பதில் இந்தியாவின் முன்னோடியான முயற்சிகளை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் நோயறிதல் கருவிகள் இதயத் துடிப்பு ஆய்வு, பிராகிருதிப் பகுப்பாய்வு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தடுப்புப் பராமரிப்பு சேவை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.
ஆயுர்வேதத்தை மரபணுவியலுடன் ஒருங்கிணைக்கும் ஆயுர்வேத மரபணுவியல் முன்னெடுப்பானது, நோய்க் குறிப்பான்களை அடையாளம் காணவும், சுகாதார பரிந்துரைகளைத் தனிப் பயனாக்கவும் வேண்டி இந்தச் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துகிறது.
மூலிகை சூத்திரங்களின் மரபணு மற்றும் மூலக்கூறு அடிப்படையை இந்த செயற்கை நுண்ணறிவு வெளிக்கொணர்ந்து, பாரம்பரிய மருத்துவ அறிவை நவீன அறிவியலுடன் இணைக்கிறது.
பாரம்பரிய அறிவு சார் எண்ணிம நூலகம் (TKDL) ஆனது உள்நாட்டு அறிவைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய மாதிரியாக சிறப்பிக்கப் படுகிறது.
செயற்கை இரசாயன உணரிகள் ரசா, குணா மற்றும் வீர்யா போன்ற பாரம்பரிய அளவுருக்களை மதிப்பிடுகின்றன.
ஆயுஷ் துறையானது, இந்தியப் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குகின்ற 43.4 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை அளவைக் கொண்டுள்ளது.