பாரம்பரியப் பொருட்களைத் திருப்பி அனுப்புவதற்கான நிதி
April 5 , 2025 26 days 56 0
நாட்டிலிருந்து திருடப்பட்டு கடத்தப்பட்ட பழங்காலப் பொருட்களை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகளை ஆதரிக்க பொது-தனியார் கூட்டாண்மைகளை மேற் கொள்வதற்கு பாராளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
தனியார் நபர்களிடமிருந்துப் பெரும் பங்களிப்புகளை ஏற்கும் வகையில் 'பாரம்பரியப் பொருட்களைத் திருப்பி அனுப்புவதற்கான நிதியை' நிறுவுமாறு அது அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இந்த நிதியானது, சட்டரீதியிலான சவால்களை ஆதரிக்கவும், கொள்முதல்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தவும், திரும்பப் பெறப்பட்ட கலைப் பொருட்களின் இட மாற்றம் மற்றும் பாதுகாப்பிற்கு நிதியளிக்கவும் பயன்படுத்தப்படும்.