பாராசிங்கா வனவிலங்கு சரணாலயம் - சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்
April 26 , 2026 34 days 146 0
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாராசிங்கா வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றி சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை (ESZ) அறிவிப்பதற்கான வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம், செயல்பாடுகளை முறைப்படுத்தவும் சுற்றியுள்ள சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் சுமார் 307 கிராமங்கள் உட்பட 408.7 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கும்.
சூழல் உணர்திறன் மண்டலங்கள் (ESZs) என்பவை தேசியப் பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள இடைநிலை மண்டலங்களாகும், இவை வளர்ச்சி, தொழிற்சாலை நடவடிக்கைகள் மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் "அபாய தணிப்பான்களாக" செயல் படுகின்றன.
இது மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஒரு முக்கியமான வாழ்விடமாக உள்ள இந்தச் சரணாலயம் முசாபர்நகர், மீரட், ஹாபூர், பிஜ்னோர் மற்றும் அம்ரோஹா ஆகிய ஐந்து மாவட்டங்களில் பரவியுள்ளது.
மனித நடவடிக்கைகளைக் குறைத்தல், பல்லுயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் இந்தப் பகுதியின் முக்கிய உயிரினமான பாராசிங்காவை (சதுப்பு நில மான்) பாதுகாக்கும் அதே வேளையில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை இந்த அறிவிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.