சமீபத்தில் 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் மோசமான முறையில் செயல்பட்டதற்காக அவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை செய்யப் பட்டு உள்ளனர்.
மாநிலங்களவையின் தலைவர் அந்த அவையின் விதிகள் புத்தகத்தின் விதி எண் 255 என்பதின் கீழ் தனது பார்வையில் எந்தவொரு உறுப்பினர் தவறாக நடந்து கொள்கிறாரோ அவரை அவை நடவடிக்கையிலிருந்து உடனடியாக வெளியேற்றும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
அந்த அவையானது அந்த அமர்வின் மீதமுள்ள காலத்திற்கு முழுவதும் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவை நடவடிக்கையில் அந்த உறுப்பினர் பங்கேற்பதிலிருந்துத் தடை செய்வதற்கான தீர்மானத்தை (motion) ஏற்றுக் கொள்ளும்.
சபாநாயகரைப் போல் மாநிலங்களவையின் தலைவர் அவையின் உறுப்பினரைத் தடை செய்வதற்கான எந்தவொரு அதிகாரத்தையும் கொண்டிருக்க வில்லை.
மாநிலங்களவையானது மற்றொரு தீர்மானத்தின் மூலம் அந்தத் தடையை நீக்கலாம்.