இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து தங்களது "பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை" புத்துயிர் பெறச் செய்துள்ளன.
இதன் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் G.L. பீரிஸ் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான "நெருக்கமான நாகரீக உறவுகளை" பற்றி குறிப்பிட்டார்.
இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒரு மிகப் பெரிய கொடை பௌத்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சங்கமமானது இரு நாடுகளுக்கும் இடையேயான பாராளுமன்றப் பரிமாற்றங்களை "புத்துயிர் பெறச் செய்யவும்" அவற்றின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவும்.
இந்தியாவிடமிருந்து உரங்களை வாங்க முடிவு செய்ததையடுத்து இலங்கை அரசானது இந்தியா-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவை உருவாக்கியது.