பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகள்
August 30 , 2025 25 days 70 0
ஒரு பகுப்பாய்வு, 31% பாராளுமன்ற உறுப்பினர்கள் (MP) மற்றும் 29% சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் காட்டுகிறது.
ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் அல்லது பிணையில் வெளிவர முடியாத குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.
இத்தகையக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மக்களவைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2009 ஆம் ஆண்டில் 14% ஆக இருந்தது என்பதோடு இது 2024 ஆம் ஆண்டில் 31% ஆக இரட்டிப்பாகியுள்ளது.
தெலுங்கானாவில் 71% அளவிலான தீவிர குற்றச்சாட்டுகளுடன் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக சதவீதத்தில் உள்ளனர் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து பீகார் 48% பங்கினைக் கொண்டுள்ளது.
கட்சிகளில், பாஜகவில் 63 பாராளுமன்ற உறுப்பினர்கள் (26%) கடுமையான வழக்குகளை எதிர்கொள்கின்றனர் என்கிற அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் 32 பாராளுமன்ற உறுப்பினர்கள் (32%) கடுமையான / தீவிர வழக்குகளை எதிர் கொள்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56% உறுப்பினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என்பதோடு உத்தரப் பிரதேசத்தில் 154 சட்டமன்ற உறுப்பினர்கள் (38%) கடுமையான வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
தெலுங்கு தேசம் கட்சி (TDP) மற்றும் இராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடுமையான வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.