பார்க்லேஸ் ஹீருன் இந்திய பணக்காரர் பட்டியல் - 2018
September 27 , 2018 2483 days 785 0
பார்க்லேஸ் ஹீருன் இந்தியா பணக்காரர் பட்டியல் 2018-ல் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான பில்லியனர் முகேஷ் அம்பானி 7வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலானது இந்தியாவில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் நிகர மதிப்புடைய சொத்துக்களை கொண்ட தனிநபர்களின் தொகுப்பாகும்.
திரு. அம்பானியைத் தொடர்ந்து லண்டனைச் சேர்ந்த S.P. ஹிந்துஜா மற்றும் L.N. மிட்டல் ஆகியோர் உள்ளனர்.
அசிம் பிரேம்ஜி இப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் உள்ள 831 தனிநபர்களின் சொத்து மதிப்பானது 719 பில்லியன் டாலராக உள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ($2848 பில்லியன்) கால்பங்கு ஆகும்.