பார்சிலோனா உடன்படிக்கைக்கான 24வது பங்குதாரர்கள் கூட்டம் (COP 24) ஆனது எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Mediterranean Blue Growth: Towards a Resilient and Sustainable Future" என்பதாகும்.
மத்தியத் தரைக் கடலின் மாசுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பு உடன்படிக்கை (பார்சிலோனா உடன்படிக்கை) ஆனது 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதியன்று பார்சிலோனாவில் ஏற்றுக் கொள்ளப் பட்டு 1978 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.