பார்ச்சூன் இந்தியா அமைப்பின் தி நெக்ஸ்ட் 500 பட்டியல் 2022 - இரயில்டெல்
March 17 , 2022 1251 days 471 0
இந்திய இரயில்வே நிறுவனத்திற்குச் சொந்தமான இந்திய இரயில்டெல் (இரயில்வே தொலைத் தொடர்பு) கழக நிறுவனமானது பார்ச்சூன் இந்தியா அமைப்பின் 8வது தி நெக்ஸ்ட் 500 (2022 ஆம் ஆண்டு பதிப்பு) பட்டியலில் இந்தியாவில் இயங்கும் சிறந்த நடுத்தர நிறுவனங்களில் 124வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய அரசின் ஒரே தொலைத்தொடர்பு பொதுத் துறை நிறுவனம் இதுவாகும்.
இரயில்டெல் தவிர, 309வது இடத்தில் உள்ள IRCTC மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இரயில்வே பொதுத்துறை நிறுவனமாகும்.