பார்ச்சூன் நிறுவனத்தின் உலகின் 500 முன்னணி நிறுவனங்களுக்கான 2022 ஆம் ஆண்டு பட்டியலில் இந்திய நிறுவனங்கள்
August 7 , 2022 1078 days 443 0
பார்ச்சூன் நிறுவனத்தின் உலகின் 500 முன்னணி நிறுவனங்களுக்கான 2022 ஆம் ஆண்டு பட்டியலில் 9 இந்தியப் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமானது இப்பட்டியலில் 98வது இடத்தில் உள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமானது முதல் முறையாக இந்தப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது (104வது இடம்) தொடர்ந்து 19வது ஆண்டாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற இந்திய நிறுவனங்கள்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (142), ONGC (190), SBI (236), பாரத் பெட்ரோலியம் (295) டாடா மோட்டார்ஸ் (370), டாடா ஸ்டீல் (435) மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் (437) ஆகியனவாகும்.
அமெரிக்காவின் வால்மார்ட் என்ற நிறுவனமானது தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
1995 ஆம் ஆண்டு முதல், 17வது முறையாக தனது முதல் இடத்தை இந்த நிறுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.