October 24 , 2021
1365 days
612
- பார்படாஸ் எனப்படும் கரீபியத் தீவு நாடானது குடியரசாக மாறும் தனது முயற்சியில் அதன் முதலாவது அதிபரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
- இந்த நடவடிக்கை மூலம் பார்படாஸ் அரசின் தலைவராக இருந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அந்தப் பதவியிலிருந்து நீக்கப் படுகிறார்.
- 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று சான்ட்ரா மேசன் என்பவர் அந்நாட்டு அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.
- சான்ட்ரா மேசன் அந்தத் தீவு நாட்டின் தற்போதைய கவர்னர் ஜெனரல் ஆவார்.
- நவம்பர் 30 ஆம் தேதியானது பிரிட்டனிடமிருந்து பார்படாஸ் நாடு விடுதலை பெற்றதன் 55வது நிறைவு ஆண்டினைக் குறிக்கிறது.

Post Views:
612