பார்வடிஹ் காட்டில் புலிகளைக் காண்பதற்கான சுற்றுப்பயணம்
June 5 , 2025 391 days 298 0
லாட்ஹார் மாவட்டத்தில் உள்ள பார்வடிஹ் மேற்கு வனப்பகுதிகளின் விளிம்போரப் பகுதியில் தனது மாநிலத்தின் புலிகளை காண்பதற்கான முதலாவது சுற்றுப்பயண அம்சங்களை நிறுவுவதற்கு ஜார்க்கண்ட் மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தப் பகுதியானது பலமு புலிகள் வளங்காப்பகத்தின் (PTR) கீழ் வருகிறது.
புலிகளைக் காண்பதற்கான சுற்றுப்பயணம் ஆனது, 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வரையறுக்கப்படவில்லை.
2012 ஆம் ஆண்டில் தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் (NCDA) வழங்கிய சுற்றுலாவிற்கான வழிகாட்டுதல்களில் இந்தக் கருத்தாக்கமானது முதன்முதலில் முன் வைக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டில், புலிகள் வளங்காப்புகளின் இடையக மற்றும் விளிம்போரப் பகுதிகளில் புலிகளை காண்பதற்கானச் சுற்றுப்பயணங்களை நிறுவுவதற்கான சில வழி காட்டுதல்களை NCDA வெளியிட்டது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், புலிகளைக் காண்பதற்கான சுற்றுப்பயண அம்சங்கள் ஆனது புலிகள் வளங்காப்பகங்களின் மையம் மற்றும் அதன் இடையகப் பகுதிகளுக்கு வெளிப்புறத்தில் மட்டுமே நிறுவப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.