உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள பார்வதி-அர்கா பறவைகள் சரணாலயத்தை இந்திய அரசு சுற்றுச்சூழல் தாங்குதிறன் மண்டலமாக (ESZ) அறிவித்து உள்ளது.
1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் (EFCC) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த சரணாலயம் சுமார் 1,084 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
இது அப்பகுதியைச் சேர்ந்த பறவைகள் மற்றும் மத்திய ஆசியா மற்றும் திபெத்திலிருந்து வரும் முதன்மையாக குளிர்காலத்தில் வலசை போகும் பறவைகளை ஆதரிக்கிறது.
ஒரு சுற்றுச்சூழல் தாங்கு திறன் மண்டலம் (ESZ) என்பது பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் பல்லுயிர் மற்றும் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்குமான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட இடையகப் பகுதி ஆகும்.