காசாவில் இஸ்ரேல் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், செப்டம்பர் மாத ஐநா சபை கூட்டத்தில் ஐக்கியப் பேரரசு பாலஸ்தீன அரசிற்கு அங்கீகாரம் அளிக்கும்.
இதன் நிபந்தனைகளில் போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிக்கான அணுகல், மேற்குக் கரையில் பிராந்திய ஆக்கிரமிப்பை நிறுத்துதல் மற்றும் நீண்டகால அமைதி செயல்முறைக்கு உறுதியளித்தல் ஆகியவை அடங்கும்.
இந்த நடவடிக்கையானது இரு-அரசு தீர்வை ஆதரிப்பதோடு, நீடித்த பிராந்திய ஸ்திரத் தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரான்சு, ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளிலிருந்து இதே போன்ற அங்கீகாரத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எதிர்த்ததோடு, அது நடந்துகொண்டிருக்கும் அமைதி முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறியது.