பாலஸ்தீன மக்களுடனான ஒற்றுமைக்கான சர்வதேச தினம் - நவம்பர் 29
November 29 , 2023 540 days 265 0
1947 ஆம் ஆண்டில் இத்தினத்தில், பாலஸ்தீனப் பிரிவினை குறித்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.
1977 ஆம் ஆண்டில், பொதுச் சபை இந்த நாளை ஆண்டுதோறும் கடைப்பிடிப்பதற்கான அழைப்பினை விடுத்தது.
1948 ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரின் போது நடந்த பாலஸ்தீனிய நக்பா (பேரழிவு) நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஐக்கிய நாடுகள் பொது சபை ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்தது.
இந்தக் காலத்தில் பாலஸ்தீனிய மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப் பட்டனர் அல்லது வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக மாறினர்.
நக்பாவிற்கு முன் பாலஸ்தீனம் பல இன மற்றும் பல கலாச்சாரச் சமூகமாக இருந்தது.
2023 ஆம் ஆண்டு பாலஸ்தீனிய நக்பாவின் 75வது ஆண்டு விழாவைக் குறிக்கிறது.