நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு, இரு நாடு தீர்வு மூலம் பாலஸ்தீன-இஸ்ரேலிய மோதலை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்து நியூயார்க் பிரகடனத்தை அறிமுகப்படுத்தியது.
காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தியதோடு, இஸ்ரேலிய நாட்டுப் படைகளை முழுமையாக திரும்பப் பெறவும், ஒருங்கிணைந்த ஆட்சியின் கீழ் பாலஸ்தீன அதிகாரசபைக்கு நிர்வாகத்தை மாற்றவும் அழைப்பு விடுத்தது.
ஆக்கிரமிப்பு முற்றுகை அல்லது இடப்பெயர்ச்சி இல்லாமல் காசாவை மேற்குக் கரையுடன் இணைக்க வேண்டும் என்றும், 1967 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான எல்லைகளுக்குள் அந்த இரு நாடுகளும் அமைதியாக வாழ வேண்டும் என்றும் இந்தப் பிரகடனம் கோரியது.
பல சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், தேர்தல்களை நடத்தவும், ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பிரதேசங்களின் மீதும் முழு கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும் பாலஸ்தீன அதிகாரசபைக்கு நிதி மற்றும் அரசியல் ஆதரவை அது கோரியது.
இரு-அரசு தீர்வுக்கு இஸ்ரேல் ஒரு பொது உறுதிப்பாட்டை பெறுமாறு கோரப் பட்டது.
போர் நிறுத்த அமலாக்கத்திற்குப் பிறகு காசாவை உறுதிப்படுத்தவும் பொது மக்களைப் பாதுகாக்கவும் தற்காலிக ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான ஒரு சர்வதேசப் படையை அனுப்புவதை இந்தப் பிரகடனம் அங்கீகரித்தது.