TNPSC Thervupettagam

பாலின இடைவெளிக் குறியீடு 2018

December 20 , 2018 2420 days 815 0
  • உலக பொருளாதார மன்றமானது (World Economic Forum-WEF) 2018 ஆம் ஆண்டிற்கான பாலின இடைவெளிக் குறியீட்டை சமீபத்தில் வெளியிட்டது.
  • இத்தரவரிசைப் பட்டியலில் இந்தியாவானது 2017-ல் இருந்த அதே இடமான 108-வது இடத்தில் உள்ளது.
  • சுகாதாரம் மற்றும் வாழ்வியல் துணைக் குறியீட்டில் இந்தியாவின் இடைவெளி அதிகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதன்முறையாக மூன்றாம் நிலை கல்வி அமைப்பில் பாலின இடைவெளியை முழுவதுமாக குறைக்க இந்தியாவால் முடிந்துள்ளது.
  • தொடர்ச்சியாக 10-வது ஆண்டாக WEF-ன் பாலின இடைவெளிக் குறியீட்டில் ஐஸ்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • தரவரிசையில் அதனைத் தொடர்ந்து நார்வே 2-வது இடத்தையும் ஸ்வீடன் 3-வது இடத்தையும், பின்லாந்து மற்றும் நிகரகுவா ஆகியவை முறையே 4 மற்றும் 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • இந்த அறிக்கையின்படி உலகம் 68% அளவிற்கு தனது இடைவெளியைக் குறைத்துள்ளது. மேலும் இதே விகிதத்தில் மாற்றத்தினைத் தொடந்தால்
    • ஒட்டுமொத்த பாலின இடைவெளியைக் குறைக்க 108 ஆண்டுகளும்,
    • பணியிடத்தில் பாலின சமநிலையைக் கொண்டு வர 202 ஆண்டுகளும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்