பியூ ஆராய்ச்சி மையமானது சமீபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டது.
இந்த ஆய்வறிக்கையானது 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் 29,999 இந்திய பருவ வயதினரிடம் நேருக்கு நேராகச் சென்று மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டதாகும்.
பதின்பருவ வயதினை அடைந்த இந்தியர்கள், ஏக மனதாக ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் இருக்கின்றது என்றும் 10ல் 8 ஆண்கள் இது மிகவும் முக்கியம் என்று கூறுவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால் 80% ஆண்கள், “எப்பொழுது சில குறைவான வேலைவாய்ப்புகளே இருக்கச் செய்கையில், பெண்களை விட ஆண்களுக்கே அதிக உரிமை இருக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.