பாலினம் சார் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தகவல் மையம்
June 23 , 2025 6 days 49 0
மத்திய அரசானது, 'பாலினம் சார் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தகவல் மையம்' என்ற பெயரில் ஒரு வலை தளத்தினைத் தொடங்கியுள்ளது.
2014-15 ஆம் ஆண்டில் சுமார் 0.98 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பாலினம் சார் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் கடந்த 11 ஆண்டுகளில், நான்கரை மடங்கு அதிகரித்து 2025-26 ஆம் ஆண்டில் 4.49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளன.
இந்த மையம் ஆனது பாலினம் சார் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான செயல்முறைகள் தொடர்பான அனைத்து தகவல்களின் எண்ணிமக் களஞ்சியமாகும்.