பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் – டிசம்பர் 17
December 19 , 2021 1386 days 388 0
உலகம் முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் வெறுக்கத் தக்க குற்றங்கள் மீது உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தினமானது ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
பாகுபாடுகளுக்கு எதிராக ஒன்றிணைவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவதற்கும் வேண்டி பாலியல் தொழிலாளர்களுக்கு இத்தினமானது வாய்ப்பினை அளிக்கிறது.
“சிவப்புக் குடை” என்பது உலகெங்கிலும் உள்ள பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான சின்னமாகும்.
2005 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிலுள்ள பாலியல் தொழிலாளர் உரிமைகள் மீதான சர்வதேசக் குழுவானது சிவப்புக் குடையினை பாலியல் தொழிலாளர் உரிமைகளுக்கான சின்னமாக ஏற்றுக் கொண்டது.