பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பருவத்தினருக்கான திட்டம்
July 9 , 2023 1080 days 537 0
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது ஒரு சிறப்புத் திட்டத்தினை அறிவித்துள்ளது.
“பாலியல் வன்முறை/கும்பல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கர்ப்பம் தரித்திருக்கும் இளம்பருவச் சிறுமிகள் தங்களுக்கான நீதியை அணுகச் செய்வதற்கான முக்கிய உதவி மற்றும் ஆதரவினை வழங்குவதற்கான திட்டம்” ஆனது தங்குமிடம், உணவு, நீதிமன்ற விசாரணைகளுக்கு வருவதற்கான ஒரு பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை வழங்கும்.
நிர்பயா நிதியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இதற்காக 74.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
கூடுதலாக, பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பருவத்தினருக்கு இந்த ஆதரவினை வழங்கச் செய்வதற்காக, மாநில அரசுகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு நிறுவனங்கள் [CCIs] ஆகியவற்றுடன் இணைந்து வாத்சல்யா திட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்பினையும் மேம்படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான (போக்சோ) சட்டத்தின் கீழ் 51,863 வழக்குகள் பதிவாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வாத்சல்யா திட்டமானது, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனில் கவனம் செலுத்துகிறது.