பாலில் கார்சினோஜென்ஸ் (புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள்)
October 19 , 2019 2127 days 740 0
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மேற்கொண்டதேசியக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக பரிசோதிக்கப்பட்ட சில பால் மாதிரிகளில் அஃப்லாடாக்சின் M1 (AFM1) என்ற கொடிய புற்றுநோய்க்கான தடயங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
பால் கணக்கெடுப்பின் இறுதி முடிவுகள் 2019 அக்டோபர் 18 அன்று வெளியிடப்பட்டன.
பரிசோதிக்கப்பட்ட மொத்த 6,432 பால் மாதிரிகளில், 368 (5.7 சதவீதம்) அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் அஃப்லாடாக்சின்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்வரும் மாநிலங்களில் அஃப்லாடாக்சின் கலப்படங்கள் அதிக விகிதங்களில் காணப் படுகின்றன
தமிழ்நாடு (551 மாதிரிகளில் 88)
டெல்லி (262 மாதிரிகளில் 38)
கேரளா (187 மாதிரிகளில் 37)
புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளானது கறந்தப் பாலைக் காட்டிலும் ‘பதப்படுத்தப்பட்ட’ பால்பொருட்களில் அதிகம் காணப்படுகிறது.
ஒரு மில்லிகிராம்/கிலோகிராம் அல்லது அதற்கும் அதிகமான அஃப்லாடாக்சின் செறிவுகளைக் கொண்ட உணவை உட்கொள்வது அஃப்லாடாக்சிகோசிஸை ஏற்படுத்தும் என்று சந்தேகிக்கப் படுகிறது.
அஃப்லாடாக்சிகோசிஸ் ஆனது கடுமையான கல்லீரல் செயலிழப்பு, மஞ்சள் காமாலை, சோம்பல் மற்றும் குமட்டல், இறுதியில் மரணம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு பிப்ரவரி 2018 இல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.