பாலைவன 'மண்ணாக்குதல்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அஜ்மீரின் பன்சேலி கிராமத்தில் உள்ள பாலைவன நிலத்தில் முதல் முறையாக கோதுமை வெற்றிகரமாக வளர்க்கப்பட்டது.
இராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUoR) ஆராய்ச்சியாளர்கள் பலபடிச் சேர்மங்களை (பாலிமர்) பயன்படுத்திப் பாலைவன மணலை வளமான மண்ணாக மாற்றினர்.
கோதுமைப் பயிர் ஆனது இங்கு மூன்று நீர்ப்பாசன சுழற்சிகளுடன் 100 சதுர மீட்டருக்கு 26 கிலோ விளைச்சலை வழங்கியது.
இரண்டாம் கட்டத்தில், ஜெய்சால்மரில் இருந்து உயிரியல் ரீதியாக பதப்படுத்தப்பட்ட மணலில் கம்பு, குவார் கம் மற்றும் கொண்டைக் கடலை ஆகியவற்றின் பயிரிடல் சோதிக்கப் பட்டன என்ற நிலையில் இதன் விளைவாக 54% அதிக மகசூல் கிடைத்தது.